Glossary entry

Tamil term or phrase:

தேம்பாவணி

English translation:

தேன் + பா + அணி - தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை, a poem by Beschi

Added to glossary by SeiTT
Sep 29, 2017 07:17
6 yrs ago
Tamil term

தேம்பாவணி

Tamil to English Art/Literary Education / Pedagogy Indian Languages
Greetings

I've become interested in the தேம்பாவணி, an epic poem on the life of Joseph, the father of Christ, by Beschi, written in 1726, as we are told in agarathi.com.

Please can you let me know exactly what தேம்பாவணி means? What individual words is it made up of?

The same ―பாவணி element seems to be used in another word group found in agarathi i.e. பண்டுதொட்டுப்பாவணியாக, 'in succession from antiquity'.

Best wishes, and many thanks,

Simon
Change log

Oct 4, 2017 05:59: SeiTT changed "Edited KOG entry" from "<a href="/profile/61459">SeiTT's</a> old entry - "தேம்பாவணி"" to ""தேன் + பா + அணி - தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை ""

Proposed translations

49 mins
Selected

தேன் + பா + அணி - தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை

தேம்பா + அணி எனப் பிரித்தால் ”வாடாத மாலை” என்றும் பொருள் தரும்.

பண்டுதொட்டுப்பாவணியாக = In succession from antiquity. இதில் ”பாவணியாக” என்பதை (பண்டைய காலத்திலிருந்து) “தொடர்ச்சியாக” என்று பொருள் கொள்ளலாம்.

Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "Many thanks, most useful!"
1 hr

An Epic poem

தேம்பாவணியின் பொருள்[தொகு]
தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.

--------------------------------------------------
Note added at 1 hr (2017-09-29 08:29:17 GMT)
--------------------------------------------------

"நாம்பா அணிப் பூங் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால்
காம்பா அணி வில் வீசிய தன் கன்னித் துணைவி, களித்து இசைத்த
தேம்பா அணி இஃது; இதை அணிவார் திரு வீட்டு உயர்வார்! அவ் இருவர்,
சாம்பா அணித் தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார்!" என மறைந்தார்.
(பொருள்): "கெடாத கற்பென்னும் அணி ஒளி வீசிய தன் கன்னித் துணைவி, தன் இளைக்காத அணியாகிய மலர்க்கொடியில் பூத்த மணமுள்ள மலர் போன்ற சொல்லாகிய மலரால் களிப்புடன் இணைத்துக் கட்டிய வாடாத மாலை இது : இதனை அணிவார் வானுலக வீட்டில் உயர்வு பெறுவார்! அக்கன்னியும் சூசையுமாகிய இருவரும், ஒடுங்காத அணி போன்ற தம் மகனோடு சேர்ந்து, நிறைந்த தயவோடு அவரைக் காப்பார்!" என்று கூறி மறைந்தனர்.
"ஆகையால், வானரசாளாகிய மரியென்பாள் வான்மேல் வழங்கு மொழியால் தேம்பாவணி என்னும் சூசைதன் சரிதை முன் சொன்ன அளவு முப்பத்தாறு படலமாக மூவாயிரத்து அறுநூற்று ஒருபத்தைந்து பாட்டென்று அறிக" என்பது, பழையவுரை அடிக்குறிப்பு. "தேம்பாவணி' என்பதனை, பூங்கொடி பூத்தநறும்பூவால் தொடுத்ந 'வாடாத மாலை' எனவும், நறும்பூ அனைய சொல் மலரால் இசைத்த 'தேம்பாவணிக் காப்பியம்' எனவும் கொள்க.

--------------------------------------------------
Note added at 1 hr (2017-09-29 08:32:45 GMT)
--------------------------------------------------

திருவாய் மணித்தேன் மலர் சேர்த்த தேம்பாவணியைத் தொழுது ஏந்தி,
மருவாய் மணிப்பூ வயல்நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன்,
உருவாய் வேய்ந்த என் இறையோனுடன் மூவரின் பொற் பதத்து அணிய,
வெருவாய்ப் புன்சொல் அஞ்சிய பின், விருப்பம் தூண்ட, தொழுது அணிந்தேன்.
(பொருள்): அக் கன்னிமரியாள்தன் திரு வாயினின்று பிறந்த அழகிய சொல் மலரால் சேர்த்துத் தொடுத்த தேம்பாவணி என்னும் சூசையின் வரலாற்றைத் தொழுது ஏந்திக் கொண்டு, மணம் பொருந்திய அழகிய பூக்கள் நிறைந்த வயல்களைக் கொண்ட இத்தமிழ் நாடு பாவ வடுவினின்று நீங்கி வாழும்படி இங்கு வந்தடைந்த நான், மனித உருவாய் வந்து தோன்றிய என் ஆண்டவனாகிய திருமகனுடன், கன்னி மரியாளும் சூசையுமாகக் கூடிய அம்மூவரின் பொன்னடிகளில் ஒரு காப்பியமாக அணியுமாறு எண்ணி, எனது புன்சொல்லைக் கருதி நடுக்கத்தோடு அஞ்சி வாளாவிருந்தபின், அவ்விருப்பம் மேன்மேலும் என்னைத் தூண்டவே, இதனை இயற்றி அம்மூவர் அடியைத் தொழுது சூடினேன்.
"ஆகையால், தேவதாய் முன் வாய்மொழியாற் சொன்ன தேம்பாவணியைப் பொருளும் பிறழாது அளவும் மாறாது தானும் தமிழ் மொழியாற் சொன்னது என்பதாயிற்று என்க" என்பது பழையவுரை அடிக்குறிப்பு.
ஆதாரங்கள்[தொகு]
Jump up ↑

--------------------------------------------------
Note added at 1 hr (2017-09-29 08:33:34 GMT)
--------------------------------------------------

கிறித்தவக் காப்பியங்கள்
தேவ அருள் வேத புராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்

--------------------------------------------------
Note added at 1 day21 mins (2017-09-30 07:39:13 GMT)
--------------------------------------------------

https://www.youtube.com/watch?v=Vstsu-0Wf9w&pbjreload=10
Example sentence:

நாம்பா அணிப் பூங் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால் காம்பா அணி வில் வீசிய தன் கன்னித் துணைவி,

Something went wrong...
1 day 11 hrs

தேம்பா + அணி = வாடாத மாலை / தேன் + பா + அணி = தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை

தேம்பாவணி என்றால் இரு பொருளுண்டு.
தேம்பா + அணி = வாடாத மாலை
தேன் + பா + அணி = தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை

இந்நூல் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. இந்நூல் கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.

பார்க்க: http://tetcoaching.net/data/documents/Std08-Tamil-2.pdf
பக்கம்: 99
Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search